Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நகை நிறுவனங்களின் வருவாய் 22–28% வளர்ச்சி

நகை நிறுவனங்களின் வருவாய் 22–28% வளர்ச்சி

டைட்டன் நிறுவனத்தின் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் விற்பனை 30 சதவீதத்துக்கும் அதிகமாகவும், சாதாரண தங்க நகைகளின் விற்பனை 20 சதவீதமும் உயர்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு அக்டோபருக்கு மாறியுள்ளபோதிலும், பட்டியலிடப்பட்ட முன்னணி நகை விற்பனை நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் 22 முதல் 28 சதவீதம் வரை வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

நுகர்வோரிடையே நிலவிய வலுவான வாங்கும் ஆர்வம், ஏற்கெனவே உள்ள கடைகளில் அதிகரித்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் கூடுதல் செலவினம் உள்ளிட்டவை இதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளின் வருவாய் 27 சதவீதம் அதிகரித்தது. 

ஏற்கெனவே உள்ள கடைகளின் விற்பனை 20 சதவீதமும், சர்வதேச செயல்பாடுகளின் வருவாய் 18 சதவீதமும் உயர்ந்தன. மேலும், அந்நிறுவனத்தின் இணையவழி நகை விற்பனை பிராண்டான கேண்டேரின் வருவாய் 64 சதவீதம் அதிகரித்தது.

பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் வருவாய் 22.4 சதவீதம் உயர்ந்தது. சில்லறை விற்பனை 31.1 சதவீதமும், ஏற்கெனவே உள்ள கடைகளின் விற்பனை 25.5 சதவீதமும் அதிகரித்தன. குறைந்த லாபம் தரும் தங்க நாணய விற்பனையிலிருந்து அதிக லாபம் தரும் நகை விற்பனைக்கு மாறியதால், இணையவழி விற்பனை வருவாய் 83.6 சதவீதம் சரிந்தது.

டைட்டன் நிறுவனத்தின் நகைப் பிரிவு 21 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் விற்பனை 30 சதவீதத்துக்கும் அதிகமாகவும், சாதாரண தங்க நகைகளின் விற்பனை 20 சதவீதமும் உயர்ந்தன. அதன் கேரட்லேன் பிராண்டின் வருவாய் 32 சதவீதம் அதிகரித்தது. மேலும், பிசி ஜுவல்லர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 28 சதவீதம் உயர்ந்தது.

நவராத்திரி அக்டோபருக்கு மாறியுள்ளதால், பண்டிகை கால நகை கொள்முதல் அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
இந்திய ரூபாய் எங்கு செல்கிறது? ரிசர்வ் வங்கி சொல்வதென்ன!
அடுத்த செய்தி
'UK-India partnership grown in ambition, breadth'

தொடர்புடைய செய்திகள்